Categories
மாநில செய்திகள்

“செல்போன் பேசக் கூடாது” தமிழக ஆசிரியர்களுக்கு பரந்த முக்கிய நெறிமுறைகள்…. என்னென்ன தெரியுமா…..????

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்கும் முன்னே வந்து விட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் மாணவர்களின் சண்டை,சாலை விபத்து, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டால் அது குறித்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பேருந்துகளில் வரும் மாணவர்கள் மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பழுதான கட்டிடத்திலோ, மரத்தடியிலோ வகுப்பு நடத்தவே கூடாது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு பின் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்த தண்டனையும் வழங்கக்கூடாது.
பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

Categories

Tech |