செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிலாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியில் வசித்து வந்த தஸ்லிம் அன்சாரி(19) என்ற வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள ரயில்வே டபுளின் லைனில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அன்னை நகரில் கூடாரம் அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தஸ்லிம் அன்சாரி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக ரயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தஸ்லிம் அன்சாரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.