Categories
தேசிய செய்திகள்

செல்போன் யூஸ் பண்ணாத…. கண்டித்த அண்ணன்…. விரக்தியில் தூக்கில் தொங்கிய தங்கை….!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான இளம் பெண்ணை அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை அவரது அண்ணன் கண்டித்துள்ளார். நேற்று மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த பெண் மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். அப்போது அவரின் சகோதரர் கடுமையாக கண்டித்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய சகோதரன்,தங்கையின் அரை நீண்ட நேரம் கூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடனே கதவை உடைத்தார்.

அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த தங்கையை கண்டுபிடித்த அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் பயன்படுத்தியதை அண்ணன் கண்டித்ததால் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |