இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் பெகாசஸ் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானின் செல்போன் எண் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிக், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் எண்ணும் வேவு பார்க்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.