வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகின்ற திரைப்படம் வாரிசு. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, சாங் யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வர இருக்கின்றது. மேலும் வாரிசு திரைப்படத்தில் விஜய் ராஜேந்திரன் என்றும் கதாபாத்திரத்தில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வாரிசு படத்தில் உள்ள கதாபாத்திரம் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் செல்லத்தோட வேலை பார்த்து திட்டத்திட்ட 15 வருடம் ஆகி உள்ளது. ஒரு நல்ல படம் கதையை சொல்லனுமா? வேண்டாமா? எனக்கு தெரியல. ஆனால் நானும் செல்லமும் திரும்ப சேர்ந்து இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.