Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை குறைக்க…. அமெரிக்கப் பெண் கையாண்ட புதிய யுக்தி….!!

செல்லப் பிராணிகளிடம் பேசி அதன் மன அழுத்தை குறைக்கும் தொழிலை அமெரிக்கா பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். 

அமெரிக்க நாட்டை சேர்ந்த  பெண்ணொருவர் வருடத்திற்கு 60 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் நிக்கி ஆகும். இவருக்கு 33 வயதாகிறது. செல்லப் பிராணிகளின் மன அழுத்தத்தை தடுக்க அவற்றுடன் பேசும் கலையை 2 வருடத்திற்கு முன் கற்றதாக தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு மணி நேர கவுன்சிலுக்கு 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார். மேலும் தங்களது செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை குறைக்க நினைக்கும் பலர் இவரை அழைக்கிறார்கள். இதனால் இவருடைய வருமானம் பல மடங்கு அதிகமாகியுள்ளது.

Categories

Tech |