Categories
தேசிய செய்திகள்

“செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்”….. இனி ரயிலில் பயணம் செய்யலாம்….!!!

செல்லப்பிராணிகளை இந்தியாவில் ரயிலில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம்.

தற்போது அனைவருமே வீடுகளில் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். அவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தங்களின் வீடுகளிலேயே விட்டுச் செல்கின்றன. சில போக்குவரத்து செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் பலரும் தங்களது பிராணிகளை தனியாக விட்டு மிகுந்த கவலையுடன் செல்கிறார்கள். ஆனால் தற்போது அந்த கவலை தேவையில்லை. ஏனெனில் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.

அதாவது ரயில் சேவை இப்போது உங்களது செல்லப்பிராணிகளை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்குகிறது. அதுவும் மிகவும் மலிவான விலையில், அதாவது ஏசி ஸ்லீப்பர் கோச், ஏசி சேர் கார் கோச் போன்றவற்றில் செல்லப்பிராணிகளை எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது. ஆனால் பிராணிகளுடன் பயணம் செய்வதற்கு என்று 2 வழிகள் உள்ளது. அதாவது நான்கு இருக்கைகள் கொண்ட கேபின் அல்லது இரண்டு இருக்கை கொண்ட முதல் வகுப்பு ஏசி பிரிவில் நீங்கள் டிக்கெட்டுகளை புக் செய்து செல்லப்பிராணிகளை அழைத்து செல்லலாம்.

உங்கள் டிக்கெட் உறுதியான பிறகு அந்த காபியை பெற்று உங்கள் செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்வது குறித்து நீங்கள் தலைமை வணிக அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். செல்லப் பிராணிகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை நீங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரங்களையும் கொடுக்க வேண்டும். ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் அந்த கேபினை அடைய வேண்டும். உங்களது டிக்கெட் மற்றும் செல்லப்பிராணியின் டிக்கெட், உடல்நல சான்றிதழ், தடுப்பூசி அட்டை போன்றவற்றை காண்பிக்க வேண்டும்.

உங்களின் அடையாள அட்டை போன்றவற்றை பத்திரமாக வைத்திருக்கவேண்டும். பயணத்தின்போது பிராணிகள் சரியாக உணவு உண்ணாமல் இருந்தாலும், நீர் அருந்தாமல் இருந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது என்று அர்த்தம். இருப்பினும் உங்களது செல்லப்பிராணிகள் இடத்தை அசுத்தம் ஆகிவிடக்கூடாது. மேலும் ஒவ்வொரு நிறுத்தத்தின் போது உங்கள் செல்லப் பிராணிகளை நீங்கள் நடைப்பயிற்சி அழைத்துச் செல்லலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

Categories

Tech |