Categories
உலக செய்திகள்

செல்லமாக வளர்த்த நாய்…. இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட முடிவு…. உறவினர் வெளியிட்ட பதிவு…!!

இளம்பெண் தனது வளர்ப்பு நாயால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் உள்ள Brimingham ஐ சேர்ந்த Keira Ladlow என்ற இளம்பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் தான் ஆசையாக வளர்த்த நாய் கடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துளார்.  இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. Kiera Ladlow உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஆசையாக வளர்த்த நாயே அவரை கடித்து காயப்படுத்தியதால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த Kiera வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து Kiera வின் உறவினர் Abeygail Barrett தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘Kiera ஏற்கனவே வளர்த்த நாய் புற்றுநோயால் இறந்ததாகவும்,  இந்த நாயை தோட்டத்தில் கண்டெடுத்து வளர்த்து வந்தார் ‘என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் நாய்கள் நல்ல நோக்கங்களுடன் சில நேரங்களில் இருக்கும் .ஆனால் அவற்றின் கடந்த காலம் சோகத்தில் இருப்பதால் சரியாக கணிக்க முடியாததாக ஆக்குகிறது  எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை பற்றி போலீசார் கூறுகையில் இந்த மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை Kiera வின் மரணம் சோகமான சம்பவம் என்று தெரிவித்துள்ளார்கள் .

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |