Categories
மாநில செய்திகள்

செல்லம்மா செல்லம்மா…. மாஸ்க்க கொஞ்சம் போடும்மா…. அட்டகாசமான கொரோனா விழிப்புணர்வு வீடியோ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “செல்லம்மா செல்லம்மா சோசியல் டிஸ்டன்ஸ் பண்ணுமா” என்ற அந்த பாடலில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நடனம் ஆடியுள்ளனர்.

Categories

Tech |