பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா தனது செல்ல நாய் குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரியலா . இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை சென்றார். பின்னர் பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கேபி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
தற்போது இவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் கேபி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கேபி தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். கேபி தனது நாய் குட்டிக்கு கேக் ஊட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.