Categories
பல்சுவை

‘செல்வமகள்’ சேமிப்பு திட்டம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒவ்வொரு திட்டங்களுக்கும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் கால அளவும் உள்ளது.

அதன்படி பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். மற்ற திட்டங்களை விட செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கூடுதலாக வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதிர்வு தொகையில் 50% வைப்பு தொகையை குழந்தைகளின் மேற்படிப்புக்காக பெற்றுக்கொள்ளலாம் அல்லது 20 வயது நிறைவடையும் போது கூட பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • IPPB என்ற செயலியில் MPIN ஐப் பயன்படுத்தி உங்கள் அஞ்சல் கணக்கில் நுழையலாம்.
  • அதில் ‘DOP சேவைகள்’ என்பதைக் கிளிக் செய்து SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் இடியை உள்ளிடவும்.
  • பிறகு நீங்கள் வைப்புத் தொகையை உள்ளிட்டு செலுத்த வேண்டிய தொகையை உறுதிசெய்து செய்யவும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP வரும் அதை உள்ளீடு செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.
  • இறுதியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வெற்றிகரமான குறுஞ்செய்தி வரும்

Categories

Tech |