Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டம் பயனாளிகள் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. என்னனு தெரிஞ்சுக்கோங்க….!!!!

செல்வமகள் சேமிப்புதிட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு (அல்லது) பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் பார்ப்பதால் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க வருகிறார்கள்.

இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்தில் வட்டி விகிதம் உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ரிசர்வ் வங்கிவெளியிட்ட அறிவிப்பின்படி ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது. வரும் ஜூலை 1 முதல், ​​பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு, என்எஸ்சி ஆகிய அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |