ரெகரிங் டெபாசிட் திட்டம், பிஎஃப், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு இனி ஆன்லைன் மூலமாகவே தொகை கட்டலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தபால் அலுவலகத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ரெகரிங் டெபாசிட் திட்டம், பிஎஃப், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் மக்களுக்கு பல நன்மைகளை அளித்து வருகிறது. பெண் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு செல்வ மகள் திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக்கொள்ளலாம். பெண் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்த்தியாகி இருந்தால் இவர்களின் பெயரிலோ அல்லது பெற்றோர்கள் பெயரிலோ கணக்கு தொடங்கலாம்.
இந்த சேமிப்பு திட்டத்தில் மாதம் மாதம் ரூ1,000 முதல்1,50,000 வரை பணம் செலுத்திக் கொள்ளலாம். வங்கிகளில் கொடுக்கப்படும் வட்டிகளை விட இந்த திட்டத்தில் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது. தற்போது ரெகரிங் டெபாசிட் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்துவதற்கு போஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக எவ்வாறு பணம் செலுத்தவேண்டும் என்பதை காண்போம்.
Ippb மொபைல் பேங்கிங் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் நான்கு இலக்க Mpin ஐ பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும். முதலில் Dop சேவைகள் என்பதை கிளிக் செய்து பின்னர் “சுகன்யா சம்ரித்தி கணக்கு” என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்னர் ssa கணக்கு என் மற்றும் dop வாடிக்கையாளர் ஐடியை இணைக்கவும். தற்போது வைப்பு தொகை உள்ளிட்டு பணம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்போது செலுத்த வேண்டிய தொகையை உறுதி செய்து உறுதிப்படுத்து பட்டனை அழுத்தவும். தற்போது மொபைல் நம்பருக்கு வந்துள்ள otp யை பதிவு செய்து சமர்ப்பி பட்டனை அழுத்தவும். அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பது நமக்கு மொபைல் நம்பருக்கு மெசேஜ் வரும்.