செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீன் ஸ்கிரீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
#Saanikaayidham shoot wrapped up.@selvaraghavan @arunmatheswaran @KeerthyOfficial @yaminiyag @ramu_thangaraj @Inagseditor @kabilanchelliah @Jagadishbliss @sidd_rao @skiran_kumar @onlynikil @CtcMediaboy #ScreenScene pic.twitter.com/4xI432yH4g
— Screen Scene (@Screensceneoffl) August 18, 2021
இந்நிலையில் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.