Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாணிக் காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |