Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

செல்வராகவன்-சோனியா அகர்வால் பிரிந்ததற்கான காரணம்… என்னையா சொல்றீங்க…!!!

செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்து செய்ததற்கான மேலும் ஒரு காரணம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கிய போது திரைப்படத்தில் நடித்த சோனியா அகர்வாலுடன் காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு பின் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் 2010ஆம் வருடம் இவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

இவர்கள் பிரிந்ததற்கான காரணங்கள் பல கூறிவந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காரணம் கூறப்படுகின்றது. அது என்னவென்றால் திருமணத்திற்கு முன்பு நெருங்கிப் பழகிய நடிகையுடன் திருமணத்திற்குப் பின்பும் நெருங்கிப்பழகி வந்தாராம் செல்வராகவன். மேலும் சுற்றுலா செல்வது தொலைபேசியில் நீண்டநேரம் பேசுவது தொடர்ந்து நீடித்து வந்தது. இது சோனியாவுக்கு தெரிய, பெரிய பிரச்சனையாக மாறியது. ஒரு கட்டத்தில் இது சரிப்பட்டு வராது என சோனியா அகர்வால் விவாகரத்து செய்ததாக கூறப்படுகின்றது.

Categories

Tech |