தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன்ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நட்ராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகாசூரன் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் பகாசூரன் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் ஒரு போஸ்டரையும் இணைத்துள்ளார்.
#SivaSivayam First single from tomorrow. A @SamCSmusic musical.. #Bakasuran #பகாசூரன் @natty_nataraj @mohandreamer @Mrtmusicoff @Gmfilmcorporat1 @subbiahshan @ProBhuvan pic.twitter.com/2MvFouNSBC
— selvaraghavan (@selvaraghavan) September 20, 2022