தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்து கணிப்புகள் வெளியாவது வழக்கம். அதில், இடதுசாரி முன்னணி கேரளாவில் ஆட்சியை தக்கவைத்தாலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இடதுசாரி முன்னணி 14 இடங்களை இழக்கிறது. 2016இல் 43.5% ஆகக் குறைகிறது. காங்கிரஸ் -38.%, பாஜக -16% , பிற கட்சிகள் -2.6% வாக்குகள் பெறும்.