Categories
தேசிய செய்திகள்

“செல்வ மகள் சேமிப்பு திட்டம்” வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. மத்திய அரசின் குஷியான அறிவிப்பு….!!!

பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தை தொடங்கி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் 10 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் இணைந்து கொள்ளலாம். இந்த சேமிப்பு கணக்குகளை பெண் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்திற்கு வருடத்திற்கு 7.6% வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் செல்வமகள் திட்டத்திற்கு அடுத்த மாதத்திலிருந்து வட்டி அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக அரசின் திட்டங்களுக்கு 0.50% முதல் 0.75% வரை வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தோடு பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் என்எஸ்சி போன்றவைகளுக்கும் வட்டி விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |