Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செழிப்பாக இருந்த விவசாயம்…. கால்வாயால் மாறிய நிலைமை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கால்வாயை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூர் பகுதியில் இருக்கும் திற்பரப்பு அருவியின் மேல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில் வலதுகரை மற்றும் இடதுகரை என இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருக்கும் வலதுகரை கால்வாய் மூலம் சிதறால், இடைக்கோடு, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை போன்ற கிராமங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. இதனால் குளங்கள் பெருகி விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சரியான பராமரிப்பு இல்லாததாலும், மழைக் காலங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த அணை செயல்படாமல் இருக்கிறது. இதனையடுத்து வீடுகளில் இருக்கும் கழிவுநீர் இந்த கால்வாயில் திருப்பி விடப்படுவதால் இந்த அணை கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதன்காரணமாக குளங்கள் வறட்சி அடைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள்  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |