கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்களை வைத்து பணி செய்வதற்கு பல எதிர்ப்பு எழுந்துள்ளது
ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஜெனிவா மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் பணி செய்வதற்கு அனுமதிப்பதற்கான விதிமுறைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் தெரியத் தொடங்கிய பிறகு ஏழு நாட்கள் வேலைக்கு செல்ல முடியாது.ஆனால் மற்றவர்களுக்கு அவர்களிடமிருந்து தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என கூறும் ஜெனிவா சுகாதாரத்துறை அதிகாரிகள் போதுமான செவிலியர்கள் இல்லாததே தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களை பணி செய்வதற்கு அனுமதி இருந்தாலும் இடைவெளியிலும் உணவு உண்ணும் சமயத்திலும் அவர்கள் தனி அறையில் தான் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதுவரை ஜெனிவாவில் இருக்கும் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஆயிரம் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த புதிய விதிகளுக்கு யூனியன்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்த விதிமுறையால் பணியாளர்கள் மட்டுமல்லாது நோயாளிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.