சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வைத்து கொரோனா நேரத்தில் தற்காலிகமாக பணியில் அமர்த்த பட்டவர்களை நிரந்தமாக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தருதல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேரில் சென்று தனது ஆதரவை கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எங்களது பங்களிப்பானது செவிலியர்களின் போராட்டத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதில் பங்கேற்று உள்ளோம். செவிலியர்களின் பணியால் கொரோனா காலத்தில் பலபேர் அழகான உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், பலரும் இன்னும் உயிருக்கு போராடி வருகின்றன இவர்களின் பணியானது நமக்கு என்றும் தேவை.அரசனது கொரோனா தொற்றிற்கு எதிராக உள்ள போராட்டமானது முடிவடைந்து விட்டது என எண்ண வேண்டாம்.
அப்போராட்டமானது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் செவிலியர்களின் பணியானது முடிந்துவிட்டது என எண்ணுவது நியாயமன்று. தமிழக அரசானது இவர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஒரு சமூகமாக இப்போராட்டத்தை முடிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கவே இந்த போராட்டத்திற்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.