சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் திவ்யா. இவர் தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மாள்’ தொடரின் நாயகனான ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பிகளை பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் குட் நியூஸ் என்று இருவரும் திருமணம் செய்து கொண்டதை திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரிஜிஸ்டர் ஆபீஸில் இருவரும் தன்மையின் திருமணத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு இன்ஸ்டாகிராமில் திவ்யா ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.