செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பெர்சர்வன்ஸ் ரோவர் காட்சியை நாசா முதன்முதலாக வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் கடந்தவாரம் பெர்சர்வன்ஸ் ரோவர் தரை இறங்கியது. அந்த காட்சியை முதன் முறையாக நாசா வெளியிட்டுள்ளது .பறந்துகொண்டிருக்கும் விண்களத்தில் இருந்து பாராசூட் மூலமாக ரோவர் விடுபட்டது. இதற்கு பேர்சன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மின்கலத்தில் மூன்று பகுதிகளில் 5 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேர்ச்மன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலமாக கீழே இறக்கப்பட்டது.
இவை மணற்பாங்கான இடத்தில் சரியான பகுதியை தேர்வு செய்து இறங்கியது.ரோவர் துல்லியமாக தரையிறங்கிய காட்சிகள் அங்குள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள் உற்சாகமாக துள்ளி குதித்த காட்சிகளும் கேமராக்களில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா ஏழு மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தது.
இந்த விண்கலம் மணிக்கு 19 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கடந்தவாரம் இலக்கை அடைந்தது. இந்த விண்கலம் சுமார் 47 கோடி கிலோ மீட்டர் தூரம் வேகமாகசென்று பயணித்ததால் விஞ்ஞானிகள் வியந்தனர். இந்த விண்கலம் செவ்வாய் தரைப்பகுதியில் பாறை படிமங்களில் உள்ள பொருட்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்து உயிரினங்கள் வாழ்ந்து இருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.