செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.