நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் செஸ் விளையாடினார்.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை அலங்காரம், வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதன் பிறகு மாமல்லபுரம் அரங்கில் முதல்வர் மு க ஸ்டாலின் செஸ் விளையாடினார்.