செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைக் கொடுத்த உதயநிதி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விக்னேஷ் சிவன்.
செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்ற 28ஆம் தேதி மாலையில் நடைபெற்றது. இதில் தமிழ் பாரம்பரிய மற்றும் வரலாற்றை சுமார் மூன்று மணி நேரம் நிகழ்த்துக்கலையாக நேரலையில் நடத்திக் கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பு பெற்று பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் விழாவை நடத்திக் கொடுத்த அனுபவம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை பெற்றது பெருமையாக இருக்கின்றது. காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து பிடித்ததால் உதயநிதி அண்ணா அழைத்து பேசினார்கள். அப்போதுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவது குறித்து கேட்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒரு மீட்டிங் ஒன்றும் நடைபெற்றது. வெல்கம் ஆந்தம்மில் முதல்வர் ஸ்டாலினை நடிக்க வைப்பது எளிமையாக தான் இருந்தது. சராசரி மனிதருடன் பேசுவது போலவே அவரிடம் பேச முடிந்தது.
மூன்று மணி நேரத்திலேயே வெல்கம் ஆந்தம்மில் முதல்வரை நடிக்க வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். இன்டர்நேஷனல் லெவலில் இருக்க வேண்டும் என உதயநிதி அண்ணா கூறியபடி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்க விழா சிறப்பாக இருந்ததாக உதயநிதி அண்ணா, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தார்கள். மேலும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி என எல்லோரும் பாராட்டினார்கள்.
இது எனக்கு கிடைத்த பெரிய அனுபவம். கமல் சார் வாய்ஸ் ஓவர், நிகழ்ச்சியை மேலே தூக்கி விட்டது. உதயநிதி அண்ணா தான் கம்மல் சாரிடம் பேசி இதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார். கமல் சார் ஸ்கிரிப்ட்டில் சில வார்த்தைகளை மாற்றி அமைத்தார். அவரின் நாலெட்ஜ் எங்களை பிரமிக்க வைத்தது. அவருக்கும் பெரிய நன்றி என கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.