செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது இந்திய பி அணி.
செஸ் ஒலிம்பியாட் போட்டி 8ஆவது சுற்று ஓபன் பிரிவில் இந்திய பி அணி அமெரிக்க அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மிகவும் வலிமையான அணியாக கருதக்கூடிய அமெரிக்க அணியை இந்திய அணி மிகவும் எளிதாக வீழ்த்தியுள்ளது. இந்திய பி அணி வீரர்கள் குகேஷ், ரவுனக் சத்வானி வெற்றி பெற்ற நிலையில். பிரக்ஞானந்தா, சரின் நிஹல் டிரா செய்தனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 11 சுற்றுகள் கொண்ட 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொருத்தவரையில் இன்று எட்டாவது சுற்று கிட்டத்தட்ட முடியும் சூழ்நிலையில் உள்ளது. இதில் இப்போதில் இருந்து அடுத்த மூன்று நாட்கள் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்றால் தான் தங்க பதக்கத்தை வெல்ல முடியும் என்ற நிலையில் தற்போது இந்திய ‘பி’அணி அமெரிக்க அணியை வீழ்த்தியுள்ளது.