சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டயில்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழா நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதியை தொடங்கி வைத்த நிலையில், 72 நகரங்களை கடந்து தற்போது மாமல்லபுரத்தை வந்தடைந்துள்ளது. இந்த ஜோதியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு, அமைச்சர் த.மோ அன்பரசனிடம் வழங்கினார். இந்த ஜோதி சென்னையில் அலங்கரிக்க பட்ட வாகனத்தின் முன்பாக வலம் வரும்போது ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், ஜீப் வீரர்கள் அணிவகுப்பு உள்பட 5000 பேர்கள் அணிவகுத்து சென்றனர். இந்த ஜோதியானது நாளை நடைபெறும் தொடக்க விழாவின்போது ஏற்றப்படும்.