Categories
மாநில செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் போட்டி”… வெற்றியடைந்த தமிழக வீராங்கனை…. குவியும் பாராட்டு….!!!!

சர்வதேச செஸ்ஒலிம்பியாட் போட்டிகள் வரலாற்று சிறப்புமிக்க நகரமான மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டாக தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற சூழ்நிலையில், இன்று முறைப்படி போட்டிகள் தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள போர் பாயிண்ட்ஸ் பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு போட்டிகள் தொடங்கியது. ஓபன் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியஅணி, ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றியடைந்தது.

இதற்கிடையில் மகளிர் ஏ பிரிவில் இந்திய அணிக்காக ஆடிய வைஷாலி, தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்ரூபை வீழ்த்தினார். செஸ்ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றியடைந்தார். இதில் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கியஅரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இந்திய பி மகளிர் அணி, வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. செஸ் ஒலிம்பியாட் ஓபன் சி பிரிவில் இடம் பெற்ற இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா போன்றோரும் வெற்றியை பதிவுசெய்து அசத்தினர்.

ஓபன் பிரிவில் பங்கேற்ற தமிழக இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றியடைந்தார். இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா போன்றோரும் வெற்றியை பதிவு செய்தனர். ஹாங்காவ் அணி வீராங்கனையை 49வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வென்ற சூழ்நிலையில், பிரதியுஷாவும் வெற்றியடைந்தார். இந்திய சி பிரிவு மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை நந்திதா சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவுசெய்தார். இந்திய பி பிரிவு மகளிர் அணியில் இடம் பெற்றுள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யாச தேஷ்முக் போன்றோரும் வெற்றியடைந்தனர்.

Categories

Tech |