சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வைஷாலி பெண்கள் பிரிவில் ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் தஜகிஸ்தான் வீராங்கனை சபரீனா உடன் முதல் சுற்றில் விளையாடினார்.
இந்த போட்டி4 மணி நேரம் நீடித்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து ஆட்டத்தை தன வசம் வைத்திருந்து, சிறப்பாக ஆடி வைஷாலி வெற்றி பெற்றார். இந்த போட்டியின் போக்கை மாற்று வதற்கு தாமதம் ஆகிவிட்டது என வைஷாலி கூறியுள்ளார். இதனையடுத்து இந்திய வீரரான சசிகிரண் ஓபன் பிரிவு ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற சசிகிரண் அமெரிக்காவுடன் மோதுவது சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.