Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. ஓபன் பி பிரிவில் பிரக்ஞானந்தா வெற்றி…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. நேற்று ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களத்தில் இறங்கினார்.

இந்நிலையில், இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றுள்ளார். எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |