சர்வதேச அளவிலான 44-வது தேர்வு ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் சின்னமான தம்பி உருவத்தில் 44 கிலோ எடை கொண்ட இட்லி செய்யப்பட்டுள்ளது. இந்த இட்லி காசிமேடு கடற்கரையில் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலும், மெரினா கடற்கரையில் இரவு 7 மணி முதல் 8:30 மணி வரையில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த 44 கிலோ எடை கொண்ட இட்லி அரிசி மாவுடன் சேர்த்து சிறு தானியங்களும் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.
இந்த இட்லி தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுதானியங்களை நம் மக்கள் மறந்து வரும் நிலையில் சிறுதானியங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தம்பி சின்னத்தின் வடிவில் அரிசி மாவுடன் சேர்த்து தானியங்களையும் கலந்து 44 கிலோ எடை கொண்ட இட்லியை தயார் செய்துள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை பொதுச்சங்க செயலாளர் இனியவன் கூறியுள்ளார்.