Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு …. 3,500 உணவு வகைகள்…. 77 மெனு கார்டுகள்…. 700 வகையான டிஷ்கள்…. அசரவைக்கும் தமிழக அரசு….!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. பலத்த பாதுகாப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையே திருவிழா போல காட்சியளிக்கிறது.

இந்நிலையில்  செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 3500 வகையான உணவுகள் அளிக்கப்பட உள்ளன.187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் நிலையில் 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு உணவுகள்,பிற மாநில உணவுகள் மற்றும் வெளிநாட்டு உணவுகள் என பல்வேறு உணவுகள் இடம் பெற்றுள்ளன.ஒருமுறை பரிமாறப்பட்ட உணவு வகை மறுமுறை பரிமாறாத வகையில் உணவு பட்டியல் திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |