Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செஸ் போட்டி”… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தற்போது வேலூர் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சாய்நாதபுரத்திலுள்ள டி.கே.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. இவற்றில் டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி, அக்சீலியம் கல்லூரி, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதன்பின் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனர் காவேரி, டி.கே.எம். கல்லூரி செயலாளர் மணிநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பானுமதி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் டி.கே.எம். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் லோகேஸ்வரி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 

Categories

Tech |