Categories
அரசியல்

சேகர் பாபுன்னு சொல்லாதீங்க….. செயல் பாபுன்னு சொல்லுங்க…. புது பெயர் வைத்த ஸ்டாலின்…!!

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் அவர் சேகர்பாபு என்று அழைப்பதைவிட “செயல் பாபு” என்றே அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வெறும் அறிவிப்போடு இந்த திட்டம் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

Categories

Tech |