தொழிலபர் சேகர் ரெட்டி மீதான வருமானவரித்துறை உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2014- 2018 காலகட்டத்தில் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் ரூ 4,442 கோடி வருமானம் ஈட்டி உள்ளது என்று வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.. அதற்காக 2,682 கோடி வரியாக செலுத்த வேண்டும் என்ற வருமானவரித்துறைதெரிவித்திருந்தது. இதையடுத்து வருமானவரித்துறை உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டியின் எஸ் ஆர் எஸ் மைனிங் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை வருமான வரியாக சேகர் ரெட்டியின் நிறுவனம் 2,682 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.
மேலும் நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடியுள்ளது வருமானவரித்துறை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.