அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் எட்டு அடி உயர வெண்கல சிலை அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளதால் அமெரிக்கா வாழ் இந்திய மக்களின் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகம் அச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பிரச்சினையை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்து சென்றுள்ள தூதரக அதிகாரிகள் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.