Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த அரசு பள்ளி… சிரமப்படும் மாணவர்கள் … பெற்றோர்களின் கோரிக்கை…!!

சேதமடைந்த அரசு பள்ளியை சீரமைத்து  தர வேண்டும் என  அதிகாரிகளுக்கு  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் நடுநிலை பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளியில் சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்தப் பள்ளியில் மொத்தம் நான்கு கட்டிடங்களே  உள்ளது. அதிலும் இரண்டு கட்டிடங்களில் மேல்கூரை உடைந்து மழைத்தண்ணீர் வகுப்பறைக்குள் நுழைகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வகுப்பறைகளில்  மாணவர்கள் உட்காரும் பெஞ்சுகள், மற்றும் கல்வி சாதனங்கள் அனைத்திலும் தண்ணீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது .

இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த பள்ளிக்கூட வகுப்பறைகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து  அதனை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |