Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்றும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 940 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 96 பள்ளிகளில் மிகவும் பழமையான மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கீழ கூடலூரில் செயல்பட்டு வரும் கம்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சேதமடைந்த பழமையான கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. அப்போது மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தண்டபாணி, உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், ஆர்.டி.ஓ கௌசல்யா, கல்வி அலுவலர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கூடிய விரைவில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |