Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்…. பொதுமக்கள் அளித்த கோரிக்கை…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சுவற்றில் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் மங்கலம், நிலாவூர், அத்தனாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டிடங்களை எம்.எல்.ஏ. க.தேவராஜி ஆய்வு மேற்கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதனடிப்படையில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். அதில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். அப்போது ஏலகிரிமலை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஸ்ரீகிரி வேலன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

Categories

Tech |