Categories
அரசியல்

“சேப்பாக்கம் சேகுவேரா” எங்கிருக்கிறார்…? யாருக்குமே தெரியல…. ஜெயக்குமார் கலாய்…!!!

அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாசாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன் உள்ளிட்ட பலரும் வருகை தந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தத்துவத்தை சொல்லி ஏழை எளிய மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை தலை நிமிர வைத்த அண்ணாவின் பிறந்த நாளில் உலக தமிழ் மக்கள் அனைவரும் அவருடைய நினைவில் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதால் அவர்களுக்கு தான் இழப்பு. எங்களுக்கு எந்த வித இழப்பும் கிடையாது.

ஆனால் அதிமுக பாமக விமர்சனம் செய்தால் எங்களால் ஏற்க முடியாது. அதிமுகவின் உட்கட்சியில் நிலவும் பிரச்சினை பற்றி பேச மற்றவர்களுக்கு தகுதி கிடையாது. ஜெயலலிதா இறந்த பிறகு சின்னத்தை மீட்டோம். இடைத்தேர்தலில் வென்றோம். உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். எம்எல்ஏ பதவி என்பது மக்களுக்கு நன்றிக்கடன் பட்டது.

நீண்ட நாள் அரசியல் இருந்து மக்களின் கஷ்டம் நஷ்டத்தை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் திரைப்படத்தில் ஜாலியாக இருந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக எம்எல்ஏ ஆக்கி உட்கார வைத்ததால் அவருக்கு போர் அடிக்க தான் செய்யும். உதயநிதியின் பேச்சு சட்டமன்றத்தை அவமதிக்கும் விதமாக இருக்கிறது. “சேப்பாக்கம் சேகுவாரா” எங்கிருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று பேசியுள்ளார்.

Categories

Tech |