சட்டசபையில் இன்று சமூகநலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயநிதி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சேப்பாக்கத்திற்குச் செல்ல பிள்ளையாக மட்டுமின்றி தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் “stalin is more dangerous than kalaignar” என பாஜக பிரமுகர் ஒருவர் பாராட்டியுள்ளார். இதுவே முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.