இந்திய ரிசர்வ் வங்கி 2022 ஆம் வருடத்தின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால் வங்கி கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் சேமிப்பு கணக்கு தாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அரசாங்க பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளதன் காரணமாக வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எப்பொழுதும் அரசு பத்திரங்களின் அடிப்படையில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வட்டி விகிதம் அதிகரிக்க இருக்கிறது. நடப்பு மாதத்தின் இறுதியில் சேமிப்பு திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் வட்டி விகிதங்கள் அக்டோபர் மாதத்தில் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் செல்வமகள் அல்லது ககன்யா சம்ரிதி திட்டங்கள் போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயரும்.
மேலும் PF திட்டத்தில் வரும் காலாண்டில் 7.56 சதவீதம் வரை உயரக்கூடும். அதேபோல செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதத்தில் இருந்து 8.3% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதங்கள் முதிர்வு கால அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.