தனியார் வங்கியான சவுத் இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சவுத் இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 2.50 சதவீதம் முதல் 4.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். மேலும் சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்பு டெபாசிட்டுக்கு 2.50 சதவீதம் வட்டியும், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 5 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுக்கு 2.75% வட்டியும் வழங்கப்படுகிறது
புதிய வட்டி (ஆண்டுக்கு):
2 லட்சம் ரூபாய் வரை : 2.50%
2 லட்சத்துக்கு மேல் – 5 கோடி ரூபாய் வரை : 2.75%
5 கோடிக்கு மேல் – 100 கோடி ரூபாய் வரை : 4.20%
100 கோடி ரூபாய்க்கு மேல் – 4.50%