இந்திய தபால் துறையை பொருத்தவரை தபால் சேவை மட்டுமின்றி மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் பல சேமிப்பு திட்டங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ள டேர்ம் டெபாசிட் சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்தால் 6.7 சதவிகிதம் வரை வட்டி பெற முடியும் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் வட்டி விதமாக மற்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் உள்ளது போல, 1 முதல் 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம்.
மேலும் 1 முதல் 3 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யும் போது 5.50 சதவீத வட்டியில், 5 ஆண்டுகளுக்கு மேல் டெபாசிட் செய்யும் போது 6.7 சதவீத வட்டியும் வழங்க பட உள்ளது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கு பயனாளி இந்திய குடியுரிமை பெற்றவராகவும், உள்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம். ஏற்கனவே தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் எளிதாக இந்த திட்டத்தில் இணைந்து விடலாம். அல்லது புதிதாக கணக்கு தொடங்கும் பட்சத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.