Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சேரும் சகதியுமாக காணப்பட்ட சாலை”…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

வேலை செய்து கொண்டிருந்த  தொழிலாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கல்லூர், ஓமக்குழி, செட்டியார் மட்டம், கவட்டை, கீழ்ஆடுபட்டு  மற்றும் மேல்ஆடுபட்டு பகுதிகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கோத்தகிரியில் இருந்து மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஜக்கனாரை பகுதியில் மழையின் காரணமாக சாலை பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பணி முடிவடைந்ததும் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக மாறியது.

இதனையடுத்து அப்பகுதியில் இறந்த ஒருவரின் சடலத்தை அமரர் ஊர்தி மூலமாக எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சாலை சேறும் சகதியுமாக இருந்ததால் வண்டி செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தற்காலிகமாக சாலை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் பொதுமக்கள் அங்கிருந்து  சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |