கொழுந்தன் ஒருவர் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் வசித்து வருபவர் ரோஹித். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவருடைய மூத்த சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் தனது சகோதரரின் மனைவி மற்றும் தாயார் ஆகியோருடன் ரோஹித் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ரோஹித் தன்னுடைய அண்ணன் மனைவியான அண்ணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று தன் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து ரோஹித் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, “என்னுடைய அண்ணனின் மனைவியான, என் அண்ணி அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவனை இழந்த அண்ணி நான் எனது தாயை விட்டுப் பிரிந்து அவருடன் சென்று வாழ வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் சண்டைவந்த போது ஏற்பட்ட கோபத்தில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” என்று கூறி உள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.