Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சேர்ந்து வாழ மறுப்பு” மனைவி மீது சந்தேகம்…. கணவனின் வெறிச்செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

கால் சென்டரில் வேலை பார்த்த மனைவியை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரிலுள்ள மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அதில் ஐந்து பேரை நியமித்து கால் சென்டர் வணிகம் செய்து வருகிறார். இதில் வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், விருப்பாச்சி புரத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்து இருவரும் சண்டை காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மஞ்சு ரேகா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது மனைவியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்தபோது அவர் வர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் கால் சென்டருக்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டி இருக்கிறார். கை,கால் மற்றும் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மஞ்சு ரேகா கீழே விழுந்ததால் பயந்துபோன தினேஷ் உடனே அங்கிருந்து ஓடியுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ள மஞ்சுளாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இதனிடையே தினேஷ் தனது மனைவியை வெட்டியதாக அருகிலுள்ள பாகாயம் காவல்  நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் தன் மனைவி மீதுள்ள சந்தேகத்தின் காரணமாக வெட்டியதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |