சேற்றில் சிக்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சன்சிகா(9), சுஜி(8) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் தோழிகளுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனை சன்சிகா, சுஜி ஆகிய 2 பேரும் குளத்தில் குறைவாக இருந்தால் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தோழிகள் உடனடியாக மணிமேகலையிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிமேகலை உடனடியாக அங்கு சென்று தனது மகள்களின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.